இராஜாங்க அமைச்சர் மாகாண உத்தியோகத்தர்களைச் சந்தித்தார்…
பிரம்பு,பித்தளை,மட்பாண்டம்,மரப்பாண்டங்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்கள் ஆகஸ்ட் 27ம் திகதி தேசிய அருங்கலைகள் பேரவையின் மாகாண, மாவட்ட, மற்றும் தலைமையக உத்தியோகத்தர்களைச் சந்தித்தார். பத்தரமுல்ல, பெலவத்தவில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டமிடல் மற்றும் கட்டிடங்கள் நிலையக் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்ற இச் சந்திப்பின் போது எதிர்வரும் ஆண்டினுள் இராஜாங்க அமைச்சினால் அமுல்படுத்த உத்தேசித்துள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி கௌரவ இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்களுக்கான உளப்பாங்கு அபிவிருத்தி பற்றிய செயலமர்வொன்று இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பிரபல விரிவுரையாளர் திரு. லசந்த காரியப்பெரும அவர்களின் வளப்பங்களிப்புடன் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. விஜித பண்டாரநாயக்க, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர்; திரு. சுதத் அபேசேகர, பணிப்பாளர் திருமதி.சந்ரமாலி லியனகே ஆகியோரும் இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டனர்.