Notice: WP_Block_Type_Registry::register என்பது தவறுதலாக அழைக்கப்பட்டது. Block type names must contain a namespace prefix. Example: my-plugin/my-custom-block-type மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 5.0.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/craftscouncilgov/public_html/wp-includes/functions.php on line 5313
National Crafts Council
Follow Us :

தேசிய அருங்கலைகள் பேரவை

இலங்கை நீண்டதொரு வரலாற்றை கொண்டுள்ளது. அது 2500 வருடங்களுக்கு மேற்பட்ட எழுத்து வடிவிலான வரலாற்றை கொண்டுள்ளது. தொல்பொருளியல் சார் சான்றுகள் அது 125,000 வருடங்களுக்கும் பிந்திய வரலாற்றுக்கு முந்திய மக்கள் குடியேற்றங்களை கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றன. இந்த மக்கள் கைப்பணிகள் மூலம் செய்த கருவிகளை தமது நாளாந்த வாழ்க்கை பயன்படுத்தியுள்ளனர். ஆதலால் இலங்கை கைப்பணிகளின் படைப்பாக்கத்தில் பண்டைய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. கைப்பணிகளை செய்வதானது மக்களின் நாளாந்த வாழ்க்கை அனேகமாக அனைத்து துறைகளுக்கும் பிரயோகத்துக்கான பண்டைய கலை வடிவமொன்றாக இருந்திருக்கின்றது. இந்த வகையில் மேன்மைக்குரிய மன்னர்களும் இராணிகளும் கைப்பணிகளின் பாரம்பரிய போசகர்களாக இருந்து கைதேர்ந்த கைப்பணியாளர்களுக்கு, அரச காணிகளை வழங்குதல், மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களின் மூலம் புகழ் வழங்கியுள்ளனர். இந்த மரபானது இன்று வரை தொடர்வதோடு, நாட்டில் சனாதிபதி அவ்வாறே செயற்படுகின்றார்.

இலங்கையின் கலைத்துறைசார் தயாரிப்புகள் தன்னகத்தே நாட்டின் இன்றியமையாத வளமான தத்துவம், நாகரீகம், அதன் கலாசாரம் மற்றும் அதன் நடைமுறைகளை கொண்டமைந்ததாக உள்ளன. எமது மரபு ரீதியான திறன்களும், கைப்பணிகளும் அரச, சமய, அதேபோல் பொதுமக்களின் தேவைப்பாடுகள் என்பவற்றிடமிருந்து தாக்கத்தை எப்போதும் பெற்றிருக்கின்றன. இந்த வகையில் கைப்பணிகளின் அவசியம் மக்களின் நாளாந்த தேவைகள் மூலம் வளர்ச்சியடைந்தன. அது அவர்களின் வாழ்க்கை, மரபுகள், மக்கள் அனுஷ்டானங்களின் அத்தியவசியமான அங்கமொன்றாக மாறியுள்ளது. எவ்வாறாயினும, பொதுமக்களிடையே இந்த உண்மை புறக்கணிப்புக்கும் அறியாமைக்கும் உட்பட்டதாக உள்ளது. மேலும் கலைஞர்களின் பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப நிலைமைகளை தீர்க்கமாக முன்னேற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. பொருளாதரத்தின் அத்தியவசிய அங்கமொன்றாக கைப்பணிகள் உள்ளடக்கியிருக்கின்றன என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது. தொழில் வாய்ப்பு உருவாக்கத்தைப் பொருத்த வரையில் அது விவசாயத்திற்கு அடுத்து இரண்டாம் நிலையில் காணப்படுகின்ற ஒரு துறையாகும். இந்த வகையில் தொழில் முயற்சி துறை, மற்றும் சந்தைகள் என்பவற்றுக்கான வாய்ப்புக்களை துரிதப்படுத்துவதற்காக கைப்பணித் துறைக்கு புதிய வடிவங்கள், புதிய சிந்தனை, புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். கைப்பணியில் ஈடுபட்டுள்ள ஆட்கள் பயிற்சியின் மூலம் வித்தியாசமாக சிந்திப்பதன் ஊடாக உலக தராதரத்தை எட்டுவது சாத்தியமானதாக இருப்பதோடு, எமது கைப்பணிப் பொருட்கள் உலக சந்தைகளில் போட்டித்தன்மை உள்ளதாக இருப்பதற்கும் வசதியளிப்பதாக இருக்கும். இது கைப்பணியாளர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதாகவும் அமையும்.

இந்த வகையில், தேசிய வளர்ச்சிக்கு நிலையான தன்மைக்குமான உந்து சக்தியொன்றாக; அதன் உள்ளார்ந்த தன்மை காரணமாக கைப்பணிகளுடன் தொடர்பான விடயங்களை ஒருங்கிணைப்பதற்கு நிறுவனமொன்று அவசியமானதாகும். இலங்கை அரசாங்கம் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக 1982 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தினால் தேசிய அருங்கலைகள் பேரவையைத் தாபித்தது. இதன் நோக்கங்களாக கைப்பணிகளை ஊக்குவித்தல், விருத்தி செய்தல், வளர்த்தல், பேணிப் பாதுகாத்தல் என்பதாக இருப்பதோடு, கைப்பணியாளர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவதுமாகும்.

கைப்பணி வகுதிகள்

2.1 சணல் சார்ந்த தும்பர ரடா ஆக்கங்கள்
2.2 சணல் சார்ந்த ஏனைய ஆக்கங்கள்

3.1 பன் புல் சார்ந்த பாய் ஆக்கங்கள்
3.2 பன் புல் சார்ந்த ஏனைய ஆக்கங்கள்

8.1 பருத்தி சார்ந்த தும்பர ரடா ஆக்கங்கள்
8.2 பருத்தி சார்ந்த ஏனைய ஆக்கங்கள்

9.1 மரம் சார்ந்த செதுக்கல் ஆக்கங்கள்
9.2 மரம் சார்ந்த சிற்ப ஆக்கங்கள்
9.3 மரம் சார்ந்த பாரம்பரிய முகமூடி ஆக்கங்கள்
9.4 மரம் சார்ந்த பாரம்பரியமற்ற முகமூடி ஆக்கங்கள்
9.5 மரம் சார்ந்த செதுக்கிய முகமூடி ஆக்கங்கள்
9.6 மரம் சார்ந்த ஏனைய ஆக்கங்கள்

10.1 சிரட்டை சார்ந்த ஆக்கங்கள்
10.2 தேங்காய் சார்ந்த ஆக்கங்கள்
10.3 ஈர்க்கு மற்றும் பாளை சார்ந்த ஆக்கங்கள்
10.4 கிரிமதுவல் சார்ந்த ஆக்கங்கள்
10.5 ஏனைய ஆக்கங்கள்

11.1 பித்தளை சார்ந்த செதுக்கல் ஆக்கங்கள்
11.2 பித்தளை சார்ந்த வார்ப்பு ஆக்கங்கள்

12.1 வெள்ளி சார்ந்த செதுக்கல் ஆக்கங்கள்
12.2 வெள்ளி சார்ந்த ஆபரண ஆக்கங்கள்

13.1 தங்கம் சார்ந்த செதுக்கல் ஆக்கங்கள்
13.2 தங்கம் சார்ந்த ஆபரண ஆக்கங்கள்

15.1 கருங்கல் சார்ந்த செதுக்கல் ஆக்கங்கள்
15.2 கருங்கல் சார்ந்த சிற்ப ஆக்கங்கள்
15.3 கருங்கல் சார்ந்த ஏனைய ஆக்கங்கள்

23.1 பற்றிக் சார்ந்த புடவை ஆக்கங்கள்
23.2 பற்றிக் சார்ந்த சுவர் அலங்காரங்கள்
23.3 பற்றிக் சார்ந்த ஏனைய ஆக்கங்கள்

24.1 பீரலு ரேந்தை சார்ந்த ஆக்கங்கள்
24.2 தறிப்பின்னல் ரேந்தை சார்ந்த ஆக்கங்கள்
24.3 கைவேலை ரேந்தை சார்ந்த ஆக்கங்கள்

25.1 நெசவு (கைத்தறி துணி) சார்ந்த புடவை ஆக்கங்கள்
25.2 நெசவு (கைத்தறி துணி) சார்ந்த ஏனைய ஆக்கங்கள்

26.1 துணி சார்ந்த கை எம்புரொயிடர் ஆக்கங்கள்
26.2 துணி சார்ந்த ஏனைய எம்புரொயிடர் ஆக்கங்கள்