Follow Us :

கைவினைஞர் சமூகத்திற்காக ஒரு மரத்தை நடுவோம்…

அதிமேதகு சனாதிபதி அவர்கள் கருங்காலி மரக்கன்றொன்று நாட்டப்ப்பட்டது.

பெப்ருவரி 4 ஆம் திகதி கொண்டாடப்பட்ட 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளோடு இணைந்ததாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் நாடளாவிய ரீதியில் மூலப்பொருள் மரக் கன்றுகள் பயிர்ச் செய்கை கருத்திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைப்பணிக் கைத்தொழில் துறைக்குப் பயன்படக்கூடிய வெடகே, பன், கொலன், மூங்கில், சனல், பிரம்பு, கருங்காலி, மகோகனி போன்ற பயிர்கள் இந்தப் பயிர்ச் செய்கையின் போது முதன்மை இடத்தைப் பெற்றன. இன்றைய தினம் அதிமேதகு சனாதிபதி அவர்கள் கருங்காலி மரக் கன்றொன்றை நாட்டி தேசிய கைப்பணிக் கைவினைஞர்களை ஊக்குவித்தமை தொடர்பாக எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“கரையோரத்திற்கு சுதந்திரம்” சுற்றாடல் நட்புறவு கருத்திட்டத்தோடு இணைந்ததாக இதன் ஆரம்ப வைபவம் கல்கிஸ்ஸ கடற்கரையில் முற்பகல் 8 மணிக்கு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய அருங்கலைகள் பேரவையின் கைவினைஞர்களால் அதன் அடையாளமாக கடற்கரையில் வெடகே மரக்கன்று ஒன்று நாட்டப்பட்டது. தெகிவளை – கல்கிஸ்ஸ நகர சபை, Go Sri Lanka நிறுவனம் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தக் கருத்திட்டத்தோடு இணைந்து கொண்ட தெகிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் உப நகராதிபதி உயர் நீதிமன்ற சட்டத்தரணி திரு. கீர்த்தி உடவத்த அவர்களும் மற்றும் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் புகழ்பெற்ற கலைஞர் திரு. சுதத் ரோஹேண அவர்களும் மற்றும் Go Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி அச்சலா குணவர்தன அவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை பகிர்ந்தளித்தனர். இந்நிகழ்வில் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புகழ்பெற்ற சித்திரக் கலைஞர் திரு. சுதத் அபேசேக்கர மற்றும் பணிப்பாளர் திருமதி சந்திரமாலி லியனகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.