பயிர்செய்கையும் மூலப் பொருட்களின் விநியோகமும்

மூலப் பொருட்களை பயிரிடல் என்ற மற்றுமொரு நிகழ்ச்சித்திட்டம் கைப்பணியாளர்களின் உற்பத்தி செயன்முறைக்காக இயற்கை மூலப்பொருட்களை சுமுகமாகவும் போதியளவிலும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேசிய அருங்கலைகள் பேரவையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டது. அதன் பிரதான நோக்கம் யாதெனில் பாரம்பரிய மற்றும் கலாசார பெறுமதிகொண்ட சுதேச கைப்பணிக் கலைகள் அழிந்து செல்லாமல் இருப்பதை பாதுகாப்பதாகும். இந்த கருத்திட்டத்தின் கீழ் ரீட், தேக்கை, ஈபோனி, ஹல்மில்ல, எஹெல மற்றும் மஹோகனி முதலிய மரங்கள் பயிரிடப்பட்டன.

 

பேரவையினால் கையாளப்பட்ட மற்றுமொரு தொழிற்பாடு யாதெனில் கைப்பணியாளர்கள் இலகுவில் கொள்வனவு செய்யமுடியாத மூலப்பொருட்களை சலுகை விகிதங்களில் இறக்குமதி செய்து விநியோகிப்பதாகும். குறிப்பாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பித்தலை மற்றும் வெள்ளிய ஆகிய உலோகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கைப்பணியாளர்கள் அத்தகைய மூலப்பொருட்களை தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைமை அலுவலகத்திலும் நட்டாரம்பொத மூலப்பொருள் களஞ்சியத்திலும் சலுகை விலைகளில் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

shilpa-new-logo-2016

 

குறிப்பான கைப்பணிகள்

பிந்திய நிகழ்வுகள்