கண்காட்சிகளும் போட்டிகளும்.

கலைஞரின் வெற்றி அவனது தொழிலின் பெருமையிலேயே தங்கியிருக்கின்றது. வர்த்தகரீதியாக வெற்றிகரமானதாக இருப்பது அவசியம் பெருமை: அங்கீகாரம் மற்றும் மதிப்பு என்பவற்றை கொண்டுவரவேண்டுமென்பதில்லை. கலைஞர்கள் தமது மரபு, பணியில் கீர்த்தி, சமூகத்திற்கு பங்களிப்புச்செய்தல் என்பவற்றை ஊக்குவிப்பதற்கு தேசிய அருங்கலைகள் பேரவை படைப்பகளில் தரம், திறன் மற்றும் கீர்த்தி என்பவற்றை கௌரவிப்பதற்கு படைப்பாற்றல் பணியின் அனைத்து துறைகளிலும் விருதுகள், பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகின்றது. அத்தகைய விருதுகள் மாகாண, தேசிய, சனாதிபதி மட்டங்களில் விநியோகிக்கப்படுகின்றன.

 

மாகாண கண்காட்சிகள்

இலங்கை ஒன்பது மாகாணங்களை கொண்டுள்து. வருடாந்த கண்காட்சிகள் ஒவ்வொரு மாகாணங்களிலும் இடம்பெறுகின்றன. விருதுகள், பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன திறமையின் அடிப்படையில் பணியின் தரத்திற்கு வழங்கப்படுகின்றன. சிறந்த கண்காட்சிகள் தேசிய மட்டத்தில் பங்கேற்புக்காக தெரிவுசெய்யப்படுகின்றன. தொழில்வாய்மைத்தன்மை, படைப்பாற்றல், வடிவமைப்பு புத்தாக்கம் என்பன தெரிவின் போது பிரயோகிக்கப்படுகின்றன.

“சில்ப” தேசிய கைப்பணி கண்காட்சி

“சில்பா”என்பது எமது கைப்பணிகள் பாரம்பரியத்தின்ஒரு கொண்டாட்டமாகும். இது வருடாந்தம் களியாட்ட மனோபாவம், விளையாட்டு, மகிழ்ச்சி, கைப்பணிப்பொருட்களுக்கான பிரத்தியேக விற்பனை சாலைகள்என்பவற்றை கொண்டுள்ளதோடு விஜயம்செய்வோர் அதை மகிழ்ச்சிமிக்க பண்டிகையாக, கொண்டாட்டமாக மாற்றிவிடுகின்றனர். சில்பா  எமது வருகையாளர்களின் உள்ளத்தையும்  எண்ணங்களையும் கவர்ந்து அருங்கலைகள் மற்றும் அருங்கலை கலைஞர்களின் மகிழ்ச்சிநிறைந்த, ஆச்சரியமான உயிரோட்டமானதாக மாற்றுகின்றது.

 

இந்த தேசிய கைப்பணிப் பொருட்கள் கண்காட்சி 20 அடிப்படை பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு,54 கைப்பணித் துறைகளை பிரதிபலிக்கின்றன. தங்கப் பதக்க விருதுகள்  மரபை  பேணுகின்ற மரபுரீதியான, நவீன துறைகளுக்கு வழங்கப்படுகின்றன. தேசிய விருதுகள் வெள்ளி விருதுகளாக வகைப்படுத்தப்படுவதோடு அனைத்து துறைகளையும் உள்ளடக்கி உள்ளன. இதற்கு மேலதிகமாக  முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு நிதிசார் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

  

exhibition-20131 exhibition-20132
exhibition-20133 exhibition-20134

shilpa-new-logo-2016

 

குறிப்பான கைப்பணிகள்

பிந்திய நிகழ்வுகள்