பிரதம கைப்பணியாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்

தேசிய அருங்கலைகள் பேரவையானது பாரம்பரிய கைப்பணிகளை இளம் சந்ததியினருக்கு அறிமுகப்படுத்தி, தொழிலற்ற இளைஞர்களை கைப்பணித் துறையில் சுயதொழிலுக்கு வழிகாட்டி, அதனூடாக அவர்களது சமூக, பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்குடன் பிரதம கைப்பணியாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் செயற்படுகின்றது.

 

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கைப்பணித் துறையிலும் நன்கு பயிற்றப்பட்ட கைப்பணியாளர் பிரதம கைப்பணியாளராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களின் கீழ் பாரம்பரிய கைப்பணி பற்றிய அறிவு பயிலுநர்களுக்கு வழங்கப்படுவதோடு அத்தகைய ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் 6 முதல் 12 மாதங்கள் பூரண நேர பாடநெறியாக நடத்தப்படுகின்றன.

 

CTP2 CTP1

shilpa-new-logo-2016

 

குறிப்பான கைப்பணிகள்

பிந்திய நிகழ்வுகள்