இலங்கை கைப்பணிச் சபையின் (லக்சல) கீழ் இயங்கிவந்த கட்டுப்பெத்த மரக்கைத்தொழில் உயர் பயிற்சி நிறுவனம் 09.09.2022ம் திகதி தேசிய அருங்கலைகள் பேரவைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லக்சலவிற்கு சொந்தமான அனைத்து பயிற்சி நிலையங்களும் 2008ம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் தேசிய அருங்கலைகள் பேரவையிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் கட்டுப்பெத்த மரக்கைத்தொழில் உயர் பயிற்சி நிறுவனம் உள்ளடங்கலாக வேறு பயிற்சி நிறுவனங்கள் சிலவும் லக்சலவின் கீழ் இயங்கிவந்தன. ஆயினும் அன்றிலிருந்து இன்றுவரை 12 வருடங்களுக்கு மேலாக கட்டுப்பெத்த மரக்கைத்தொழில் உயர் பயிற்சி நிறுவனம் செயற்படாமல் இருந்த காரணத்தினால் அங்கிருந்த பெறுமதியான கட்டடங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் அழிவடைந்தமையால் அந்நிறுவனத்தை மீண்டும் உயிரூட்டுமுகமாக தேசிய அருங்கலைகள் பேரவைக்கு ஒப்படைக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அதன்பிரகாரம் கௌரவ கைத்தொழில் அமைச்சர் ரமே~; பத்திரண அவர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் அந்நிறுவனம் தேசிய அருங்கலைகள் பேரவைக்கு வழங்குவதற்கு லக்சல நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் பரந்துள்ள மரவேலை பாடசாலைகளில் வருடாந்த பயிற்சி வகுப்புக்களை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு 2009ஆம் ஆண்டு வரை கட்டுப்பெத்த மரக்கைத்தொழில் உயர் பயிற்சி நிறுவனத்தில் உயர் டிப்ளோமா பாடநெறி நடைபெற்றது ஆனாலும் சென்ற பல ஆண்டுகளாக அந்நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் மரக்கைத்தொழில்துறை உயர்டிப்ளோமா பாடநெறியினை முழுநாடும் இழந்திருக்கின்றது.