“சில்ப அபிமானி – 2021” தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றி பெற்ற கைப்பணியாளர்களை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது விழா அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது தலைமையில் 25.01.2022 ம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மத்தி நிலையத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கைத்தொழில் அமைச்சர் கௌரவ. விமல் வீரவன்ச அவர்கள், வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள், பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ.பிரசன்ன ரணவீர அவர்கள், கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜெனரல் தயாரத்நாயக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.விஜித பண்டார அவர்கள் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.