Follow Us :

மூலப்பொருள் பயிர்ச்செய்கைத் திட்டத்திற்கான “Dunuke” தாவரப் பயிர்ச் செய்கை

தேசிய அருங்கலைகள் பேரவை மூலப்பொருள் வங்கி கைவினையாளர்களுக்காக “Dunuke” தாவர பயிர்ச் செய்கை திட்டத்தை 2021.06.09 ஆம் திகதியன்று பேருவளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரிகல்கொடெல்ல கிராமத்தில் தேசிய அருங்கலைகள் பேரவைக்கு உரித்தான வட்டகே பயிற்சி மையவளாகத்தில் ஆரம்பித்து வைத்தது.

இந்த பயிர்ச் செய்கை திட்டத்தை பிரம்பு, பித்தளை, களிமண், தளபாடங்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. விஜித பண்டாரநாயக்க, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் திரு. சம்பத் எரஹபொல, பேருவளை பிரதேச செயலாளர் திரு. ரஞ்சித் சி. பெரேரா, மேற்படி இராஜாங்க அமைச்சின் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் திரு. புத்திக லக்மால், மற்றும் மேற்படி இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் திரு. பிரியந்த குமார மற்றும் மேல் மாகாண தேசிய அருங்கலைகள் பேரவையின் உதவிப் பணிப்பாளர் திருமதி.நிரஞ்சலா குணசிங்க ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தனர். மேலும் தேசிய அருங்கலைகள் பேரவையின உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.