அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அலவல கிராமம் வட்டபதுர சார்ந்த ஆக்கங்களைச் செய்கின்ற கைவினைஞர்கள் வசிக்கின்ற ஒரு கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தின் கைவினைஞர்களுக்கு 23.01.2021ம் திகதி அவர்களின் வேலைத்தளங்களை நிர்மாணிப்பதற்காகக் கூரைத்தகடுகள் மற்றும் சிறிய இயந்திர உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.
பிரம்பு, பித்தளை, மட்பாண்டம், மரத்தளபாடம் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உபுல் மஹேந்திரன் ராஜபக்ச, பிரதேச சபை உறுப்பினர் கௌரவ.பிரதீப் மதுரங்க உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரமுகர்கள், தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் திரு.சுதத் அபேசேகர, பணிப்பாளர் திருமதி.சந்ரமாலி லியனகே, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் காமினி அதிகாரி, அரச அலுவலர்கள் மற்றும் கைப்பணிக் கைத்தொழில் கைவினைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.