தேசிய அருங்கலைகள் பேரவையின் தவிசாளர் திரு. சுதத் அபேசேக்கர அவர்கள் கடந்த சில தினங்களாகப் பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மேற்பார்வை செய்வதில் ஈடுபட்டார். அதன் போது தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்த தவிசாளர் அவர்கள், கௌரவ அமைச்சர் விமல் வீரவங்ஸ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய விளைதிறன்மிக்க பயிற்சி நிலையங்களை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.