கலாசார, பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து இந்த சுதேச கைப்பணிகளை பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் தேசிய அருங்கலைகள் பேரவையினால் கைப்பணிக் கிராமங்களின் நிர்மாணமும், பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான கைப்பணிப் பொருட்களை ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளிப்பதுமாகும்.அதன் பிரகாரம், பத்தரமுல்லையிலுள்ள தேசிய அருங்கலைகள் பேரவை தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைப்பணிகள் கிராமம் சீகிரிய குன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிம்பிஸ்ஸவிலுள்ள சீகிரிய கைப்பணிகள் கிராமம் என்பன அத்தகைய இரண்டு கிராமங்களாகும். இதற்கு மேலதிகமாக, சில்ப கைப்பணிகளின் விற்பனைக்கான கிராமமொன்றின் நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, வருட இறுதியில் அதன் அநேகமான வேலைகள் பூர்த்தி செய்யப்படும்.
இந்த கைப்பணிகள் கிராமங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சமூகங்களும், இத்துறையில் ஆர்வமுள்ள எதிர்கால பரம்பரையும் இந்த பாரம்பரியத்தை தமக்கு வசதியான அமைப்பில் அவதானித்து, ஆய்வு செய்து தமது சந்தை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து கொள்ளத்தக்கவையாகும்.
அதன் பிரகாரம், இந்த கிராமங்களிலுள்ள கூடங்களுள் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் திறந்தவிடப்பட்டு, கைப்பணியாளர்களை சந்தித்து, அவர்களது செயற்பாட்டு தளங்களில் கிராமங்களில் அவர்களை காண முடியும் என்பதோடு அவர்களது உற்பத்திகளை கொள்வனவு செய்து, கட்டளைகளையும் பெறக்கூடியதாக இருக்கும்.
சீகிரிய சில்ப கைப்பணிகள் கிராமம்
சீகிரியாவிலுள்ள கைப்பணிகள் கிராமம் 2003 இல் தாபிக்கப்பட்டது. பல்வேறு கைப்பணிகளின் முகாமைத்துவத்திற்கான வசதிகளைக் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகின்றது. கைப்பணியாளர்களுக்காக 48 கூடங்கள் இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கைப்பணியாளர்கள் பொருட்களை அவர்கள் விற்பனை செய்கின்ற வகையில் காட்சிப்படுத்தி தமது பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
இது இடைத்தரகர்களின் தலையீடின்றி (கட்டளைகளை வழங்குவதற்கு) கைப்பணியாளர்கள், வாடிக்கையாளர்களுடன் நேரடியாக வியாபார தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கும் தயாரிப்பாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் நேடியாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியளித்திருக்கின்றது.